மாதவன்குறிச்சியில் சிறப்பு ஊராட்சி கூட்டம்
மாதவன்குறிச்சியில் சிறப்பு ஊராட்சி கூட்டம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
மாதவன்குறிச்சி கிராம பஞ்சாயத்தில் சிறப்பு ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் த.சேர்மதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பொற்செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.