வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

ஜோலார்பேட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-01-01 17:14 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் எக்ஸெல் ஜி.குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை அரிசி ஆலை உரிமையாளர் ராஜா, கிளாசிக் அன்பு ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன் மற்றும் வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்