நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நெசவு கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்றது. கண்காட்சி மற்றும் முகாமினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஜவுளி ரகங்களையும் அவர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு கடன் உதவிகள், உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், தெற்கு மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ், நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.