மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

காவேரிப்பாக்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-24 18:24 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் பல் நோக்கு மறுவாழ்வு திட்டங்களுக்கு தேர்வு செய்யும் முகாம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, கை, கால் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

முகாமில் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு, புதிய ஆதார் கார்டு, உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்