கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-07-07 18:17 GMT

தோகைமலை அருகே புழுதேரி இந்திய வேளாளர் ஆராய்ச்சி கழகம் அறிவியல் மையம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ஆர்ச்சம்பட்டி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் புஷ்பலதா, வேளாண் அறிவியல் மையம் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள். முகாமில் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல், சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை விவசாயிகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்