சிறப்பு மருத்துவ முகாம்

முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-24 20:20 GMT

சாத்தூர், 

சாத்தூர் தாலுகா சின்னக்காமன்பட்டி இந்து தொடக்கப்பள்ளியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கம் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் செல்லத்தாய் குணசேகரன் முன்னிலை வகித்தனர். உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். நடுச்சூரங்குடி மருத்துவர் அலுவலர் லாவண்யா முகாமின் அவசியம் குறித்து கூறினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் கணேசன்குமார் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பில் கண்காட்சி மற்றும் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்