சிறப்பு மருத்துவ முகாம்
உடன்குடி தேரியூரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ ஆலுவலர் ஆனிபிரிமின் தலைமை தாங்கினார். செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், டாக்டர்கள் ஆர்த்தி பிரசாத், அஸ்வின், பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, குருசாமி, ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உடன்குடி யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்ட தி.மு.க பிரதிநிதி மகேஸ்வரன், தினகர், கிளைச் செயலர் மோகன், தனசிங் மற்றும் மருத்துவ, சுகாதார அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.