சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனைகளும், மருத்துவமும் அளிக்கப்பட்டது. இதில்
தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் என். நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.