வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சிற்றம்பலம் அருகே வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-07-28 20:20 GMT

திருச்சிற்றம்பலம்;

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள அம்மையாண்டி ஊராட்சி ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில், "கலைஞரின் வரும் முன் காப்போம்" மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர், மல்லிகை முத்துராமலிங்கம் வரவேற்றார். அசோக்குமார் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து பேசினார்.முகாமில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர்கள் ரஞ்சித், பொன்மணி மேகலை, சதீஷ், கிருஷ்ண பாரதி, சிந்தியா, பிரவீன், சதீஷ்குமார் மற்றும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 1,147 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 6 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்