திருஇருதய அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை திருஇருதய அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை திருஇருதய அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சிறப்பு திருப்பலி
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபியில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று முன்தினம் திருச்சடங்குகளுடன் சிறப்பு திருப்பலி நடந்தது.
பங்கு தந்தை ஜெயக்குமார் தலைமையில் உதவி பங்கு தந்தை பாலன் மற்றும் திருத்தொண்டர் பவுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஊர் பொதுமக்கள், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து இயேசுவின் சொரூப பவனி முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டது. ஏற்பாடுகளை ரொசாரி மாதா சபையினர், ஊர் நலக் கமிட்டியினர், திரு இருதய சபையினர் செய்திருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைபாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பங்குத்தந்தை கிஷோக் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.