நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விசாரணை முகாம்
நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் ஆலத்தூர் வட்டார வருவாய் துறையினருடன் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமினை நேற்று நடத்தினா். இதில் ஆலத்தூர் வருவாய் தாசில்தார் முத்துகுமார், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், நல்லம்மாள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பான பெறப்பட்ட 6 கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர்.