காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-03-11 19:15 GMT

தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 121 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் முதுகுளம் ஊராட்சியில் முதுகுளம், அச்சிதாபுரம், மூக்கப் உடையான்பள்ளம், சுந்தம்பட்டி ஊராட்சியில் மருங்கூரணி கிராமம் மற்றும் பெரிய கோட்டை ஊராட்சியில் உள்ள கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்