கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு ரூ.54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை
கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு ரூ.54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு ரூ.54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 2021-22-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வினியோகித்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டு அரவைக்கு கரும்பு அனுப்பிவைத்த விவசாயிகளின் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டது. கரும்பு வினியோகம் செய்த 512 விவசாயிகளுக்கு ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்து 320 வழங்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பச்சையப்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அபிவிருத்தி அலுவலர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.