தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு உதவி மையம்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-05 19:05 GMT

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2023-ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி பதவிக்கான இணைய வழி விண்ணப்பம் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உதவி மைய தொலைபேசி எண் 9498101769 ஆகும். இங்கு வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதேபோல் நெல்லை மாநகர போலீஸ் துறையில் காவல் உதவி மையம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொலைபேசி எண் 0462-2970067 ஆகும். தேர்வுக்கு பதிவு செய்ய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://www.tnusrb.tn.gov.in/ -ஐ பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்