திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு குறைதீர் முகாமில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையர், திருநம்பியர் கலந்துகொண்டு மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.