முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடக்கிறது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள், படையில் பணிபுரிந்து வருபவரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக இரட்டை பிரதிகளுடன் அடையாள அட்டையுடன் நேரில் கொடுக்கலாம். அத்துடன் முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்றுடன் வரவேண்டும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.