விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்31-ந் தேதி நடக்கிறது

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 31-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-01-21 18:45 GMT


முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தின்போது முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர் மற்றும் படையில் பணிபுரிந்து வருவோரின் குடும்பத்தினர் அவர்களது கோரிக்கையை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி அடையாள அட்டை நகலுடன் இரட்டை பிரதிகளில் கலெக்டரிடம் நேரில் சமர்பிக்கலாம். அத்துடன் முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்