கிணத்துக்கடவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
கிணத்துக்கடவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொள்ளாச்சி சப்- கலெக்டர் பிரியங்கா கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 107 மனுக்களை பெற்றார். இதில் மாற்றுத்திறனாளிகள் 19 பேருக்கு அடையாள அட்டையும், 6 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலியும், யு.டி.ஐ.டி.எண் 21 பேருக்கும், 2 பேருக்கு ஊன்றுகோல் உள்பட மொத்தம் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கை பகுதிக்குச் சென்று சப்- கலெக்டர் பிரியங்கா வழங்கினார்.
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெகதீசன், கிணத்துக்கடவு தாசில்தார் சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பிரேமலதா, கிணத்துக்கடவு மண்டல துணை தாசில்தார் முத்து, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.