சிறப்பு கிராம சபை கூட்டம்
10 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள சிறுக்குளம், சடையம்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, சங்கரநத்தம், சூரங்குடி உள்பட 10 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகலட்சுமி, சமூக தணிக்கை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கூறப்பட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.