சிறப்பு கிராம சபை கூட்டம்
கூகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு கிராம சபையால் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்கு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், ஊராட்சி துணைத்தலைவர் ரெத்தினவள்ளி காளீஸ்வரன், ஊராட்சி செயலாளர் மைக்கேல்ராஜ், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.