ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரை தேடி மும்பை விரைந்த தனிப்படை
ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவரை தேடி மும்பைக்கு தனிப்படை விரைந்தது
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சத்தியபாண்டி, கோவில் பாளையத்தை சேர்ந்தவர் கோகுல். இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
விசாரணை யில் ரவுடி கும்பல்களுக்கு இடையே சமூக வலைதளத்தில் நடந்த மோதல் காரணமாக படுகொலை சம்பவங்கள் நடந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளை ஒழிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து ரவுடிகளின் பெயர் பட்டியலை தயாரித்தனர். அதில் இதுவரை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இறுதியாக பெங்களூருவில் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கோவை யில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது கேரளாவை சேர்ந்த டில்லி என்பது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை போலீ சார் தீவிரம் காட்டினர்.
இதில், அவர் மும்பையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அவரை பிடிக்க மாநகர தனிப்படை போலீசார் மும்பை விரைந்து உள்ளனர்.