தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள்

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு சிறப்புக்கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2022-10-21 19:30 GMT

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரெயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு சிறப்புக்கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லைக்கு சிறப்பு ரெயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு தென்னக ரெயில்வே பண்டிகை கால சிறப்பு கட்டண ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06049) தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06050) நெல்லையில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, சென்னை சென்டிரல்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06041) நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும். டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- ராமேசுவரம்-தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06042) ராமேசுவரத்தில் இருந்து வருகிற 24-ந் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில் எழும்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் செல்லாமல் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

நாகர்கோவில்-பெங்களூரு

நாகர்கோவில்-தாம்பரம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06040) நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் நள்ளிரவு 3.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திரச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4- பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

நாகர்கோவில்-பெங்களூரு கன்டோண்மென்ட் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06052) நாகர்கோவிலில் இருந்து வருகிற 25-ந் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூரு கன்டோண்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரு கன்டோண்மென்ட்-நாகர்கோவில் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06051) பெங்களூருவில் இருந்து வருகிற 26-ந் தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சேலத்தில் இருந்து இந்த ரெயில் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சுவேலி-தாம்பரம்

கேரள மாநிலம் கொச்சுவேலி-தாம்பரம் சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06044) வருகிற 25-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து நண்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரம்-கொச்சுவேலி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் (வ.எண்.06043) வருகிற 26-ந் தேதி தாம்பரத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் 16 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags:    

மேலும் செய்திகள்