பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக நெல்லையில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு கட்டண ரெயில்

பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக நெல்லையில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது

Update: 2023-01-12 20:32 GMT


தென்னக ரெயில்வே சார்பில், பொங்கல் பண்டிகை விடுமுைறயை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை இயக்கப்படுகிறது. இதற்கிடையே, தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லைக்கு ஒரு சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06049) நாளை (சனிக்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 9 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06050) நெல்லையில் இருந்து வருகிற 18-ந் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.8 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்