கோரையாறு மகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

கோரையாறு மகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

Update: 2023-04-21 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்