சிறப்பு அலங்காரம்
போடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மாசி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நேற்று போடி சுப்புராஜ் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.