திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி

சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி நடந்தது.

Update: 2023-08-12 20:15 GMT

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சிறப்பு தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் துணைமேயர் ராஜப்பா கலந்து கொண்டு தூய்மை பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் நகர் முழுவதும் 75 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்