குமரியில்பொது வினியோக திட்ட குறைகளை களைய சிறப்பு முகாம்10-ந் தேதி நடக்கிறது
குமரியில்பொது வினியோக திட்ட குறைகளை களைய சிறப்பு முகாம்10-ந் தேதி நடக்கிறது
நாகர்கோவில்:
குமரியில்பொது வினியோக திட்ட குறைகளை களைய சிறப்பு முகாம்10-ந் தேதி நடக்கிறது
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொது வினியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 10-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் செய்தல், பி.எச்.எச். அட்டையில் பெண் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். பொது ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-***************