மின் இணைப்பு வழங்க சிறப்பு முகாம்

மின் இணைப்பு வழங்க சிறப்பு முகாம்

Update: 2022-07-02 12:50 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே அம்பலமூலா அரசு தொடக்கப்பள்ளியில் வருவாய்த்துறை மற்றும் மின்வாரியம் சார்பில் மின் இணைப்பு இல்லாத ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், அய்யன்கொல்லி மின்வாரிய வணிக ஆய்வாளர் பத்மநாதன், போலீஸ் ஏட்டு சித்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். முகாமில் அம்பலமூலா, தேனம்பாடி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்