வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.

Update: 2022-11-25 19:45 GMT

2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 9.11.2022 வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து 9.11.2022 முதல் 8.12.2022 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன. இதையடுத்து இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை வருகிற 8-ந்தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும், முகாம் நாட்களின் போது அனைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்