நில அபகரிப்பு தடுப்பு குறித்த சிறப்பு முகாம்

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு குறித்த சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-12-29 21:08 GMT

நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு ப.சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

உதவி கலெக்டர் தமிழரசி, தாசில்தார் பகவதி பெருமாள், துணை தாசில்தார்கள் சரவணன், இசைவாணி மற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு, அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராள்பானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் தனலெட்சுமி, முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 21 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதன் மீதான விசாரணை முடிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்