வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்த சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
திருச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி பொதுமக்கள் சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொண்டனர்.