குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

வேலூர் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-09 17:17 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்  நடந்தது.

முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமுக்கு குடிமை பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தனி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் வேலூர் தாலுகா பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை தொடர்பாக திருத்தங்கள் செய்ய மனு அளித்தனர்.

புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கேட்டு அளித்த விண்ணப்பங்களை தவிர மற்ற விண்ணப்பங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. வேலூர் தாலுகாவில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் 83 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்