ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

பந்தலூர் தாலுகாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-08-20 13:56 GMT

பந்தலூர், 

பந்தலூர் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேங்கோரேஞ்சில் நடந்த முகாமை பந்தலூர் தாசில்தார் நடேசன், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் பந்தலூர் தாலுகா முழுவதும் 5,500 மனுக்கள் பெறப்பட்டது. நேற்று 8,391 மனுக்கள் பெறப்பட்டன. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முகாம் நடக்கிறது. முகாம்களில் கலந்துகொள்ள முடியாத பொதுமக்கள், வீடுகளுக்கு வரும் தேர்தல் அலுவலர்களரிடம் படிவங்களை பூர்த்தி செய்து ஆதர் எண்ணை இணைத்து கொள்ளலாம். மேலும் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு சென்று வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்