விவசாயிகள் நிதி உதவி பெற சிறப்பு முகாம்

விவசாயிகள் நிதி உதவி பெற சிறப்பு முகாம் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-01 18:13 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளை கிசான் கடன் அட்டை திட்டத்தில் சேர்த்தல் தொடர்பான முகாமில் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம்.

மேலும் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவிப் பெறும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற செய்தல் தொடர்பான முகாம் திருப்பத்தூரில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் 10-ந் தேதியும், கந்திலியில் 4 மற்றும் 17-ந் தேதிகளிலும், ஜோலார்பேட்டையில் 5 மற்றும் 22-ந் தேதிகளிலும், ஆலங்காயத்தில் 8 மற்றும் 16-ந்் தேதிகளிலும நடக்கிறது.

நாட்டறம்பள்ளியில் 10 மற்றும் 18-ந்் தேதிகளிலும், மாதனூரில் 9 மற்றும் 11-ந்் தேதிகளிலும் நடக்கிறது.

முகாம்களில் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் சிட்டா, அடங்கல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

முகாம் தொடர்பான விபரங்களுக்கு தங்களின் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை திருப்பத்தூர் மற்றும் கந்திலி-9894804130, ஜோலார்பேட்டை-9994127177, நாட்டறம்பள்ளி 9787708313, லங்காயம்-9361791499, மாதனூர்-9488059878 என்ற எண்களிலும், சம்பந்தப்பட்ட வங்கியாளர்களை 8870949700, 9080038771 என்ற எண்களிலும் தொடர்புக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்