மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-09 19:21 GMT


விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாநிலத்தலைவர் வில்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட செயலாளர் நாகராஜன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்