செவ்வாய்க் கிழமைகள்தோறும் மாற்றுதிறனாளிகள் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமைகள்தோறும் மாற்றுதிறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவமதிப்பீடு முகாம் நடைபெற்று வந்தது. மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி வருகிற 21-ந் தேதி முதல் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் தொடர்ந்து இந்த முகாம் நடைபெற உள்ளது. மேலும் புதிய தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.