அரசு ஆஸ்பத்திரிகளில் கருத்தடை சிறப்பு முகாம்

அரசு ஆஸ்பத்திரிகளில் கருத்தடை சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-25 18:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் யோகவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

குடும்ப நலத்துறை சார்பில் பெண்களுக்கு தற்காலிக கருத்தடை ஊசி சிறப்பு முகாம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறும். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, காரைக்குடி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள 16 அரசு ஆஸ்பத்திரி,, 52 ஆரம்ப சுகாதார நிலையம், 295 துணை சுகாதார நிலையங்களில் கட்டணமில்லாத கருத்தடை ஊசி செலுத்தப்படும். இந்த கருத்தடை ஊசியை பெண்கள் ஒரு முறை செலுத்திக் கொண்டால் கர்ப்பப்பை புற்றுநோய், கருப்பை கட்டி தவிர்க்கப்படும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை கருத்தடை ஊசி போட்டுக் கொள்ளலாம். இது இரு குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி அளிக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கும் கருத்தடை ஊசி போடப்படும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்