நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2022-12-01 19:21 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் சார்பில் நவகைலாய கோவில்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி வருகிற 18-ந்தேதி, 25-ந்தேதி, ஜனவரி மாதம் 1-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஆகிய 4 நாட்கள் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று இரவு நெல்லைக்கு திரும்பி வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.600 ஆகும். மேலும் விவரங்களுக்கு 9487599456, 9345179967 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த சிறப்பு பஸ்களை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்