விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-17 18:13 GMT

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கரூர் எல்.ஜி.பி. நகரில் உள்ள குபேர சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி விநாயகருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு பூக்களால் அலங்காரம், பூஜை செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நொய்யல் அருகே நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட ௧௬ வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்