ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம்
ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பூசாரி தெருவில் ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி ஷீரடி சாய்பாபாவுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. பினனர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.