வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தலைஞாயிறு அருகே வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
வாய்மேடு:
நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்து ஓரடியம்புலம் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.