சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Update: 2022-10-11 19:21 GMT

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் அக்ரஹரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நன்செய் புகழூர் அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  

Tags:    

மேலும் செய்திகள்