சேவூர் ஓசூர் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ஆடித்திருவிழாவையொட்டி சேவூரில் உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
ஆரணி
ஆடித்திருவிழாவையொட்டி சேவூரில் உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
ஆரணியை அடுக்க சேவூர் ஊராட்சியில் உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் ஆடி திருவிழாவின் 5-ம் வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
.விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாம தரிசனம் செய்தார். இதில் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகர செயலாளர் அசோக்குமார், முன்னாள் அரசு வக்கீல் வெங்கடேசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சி.பிமன் என்கிற ரவி, சி.குணசேகரன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தினர்.