நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயருக்கு தினந்தோறும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.