அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சமயபுரம்:
சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களான முருகன், விநாயகர், அங்காயி சித்தர், அகோர வீரபத்திரர், இருளப்பசாமி, மதுரை வீரன், பனையடி கருப்பு, பேச்சியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.