ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியாருக்கு எதிராக பேசுவதா? அண்ணாமலை மீது கே.எஸ்.அழகிரி தாக்கு

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

Update: 2023-11-19 20:15 GMT

அலங்கரித்து வைக்கப்பட்ட இந்திரா காந்தி உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.அதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் தலைமையில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

மது ஒழிப்பை பற்றி பேசும் முழுத்தகுதியும் காங்கிரசுக்கு உண்டு. கள்ளுக்கு தடை விதித்தபோது, தனக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தவர் பெரியார். ஆனால் சிலர் (அண்ணாமலை) பெரியாருக்கு எதிராக பேசி வருகிறார்கள். பெரியார் சிலைகளை, பெரியார் கல்வெட்டுகளை அகற்றுவோம், அப்புறப்படுத்துவோம் என்று பேசி வருகிறார்கள். அதிகாரத்தில் கட்சி இருப்பதால், பாதுகாப்பாக பேசுகிறார். அவரைப் போல கோழை அல்ல பெரியார். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல அவர் (அண்ணாமலை) பேசலாம். அவர்கள் மரபு (பா.ஜனதா) தியாக மரபு அல்ல. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்வேளையில், நிறைய தெருமுனை பிரசாரங்களை நாம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்