புதிய கட்டிட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு
புதிய கட்டிட பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் 3 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டு வேலையை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். பின்னர் அவர், நாங்குநேரி யூனியனில் இயங்கி வரும் நாங்குநேரி வட்டார மகளிர் திட்டக்குழு உறுப்பினர்களிடம் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி, வள்ளியூர் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரகுமார், நாங்குநேரி பொறியாளர்கள் சபரிகாந்த், மீனாட்சி, மேலாளர்கள் மலர், முருகப்பெருமாள், மகளிர் திட்டக்குழு கலா மற்றும் உறுப்பினர்கள் உடன் சென்றனர்.