ஏரிக்கரையில் மரக்கன்றுகள், பனை விதைகள் விதைப்பு

பேளுக்குறிச்சி அருகே ஏரிக்கரையில் மரக்கன்றுகள், பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-09-18 18:55 GMT

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி, கல்குறிச்சி, கொசுவன்குட்டை ஏரிக்கரை பகுதிகளில் நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓசோன் தினத்தை கொண்டாடும் விதமாக நடந்த அந்த பணியினை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், நாமகிரிப்பேட்டை ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, ராசிபுரம் ஒன்றிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், தொப்பம்பட்டி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் ஆகியோர் கலந்து கண்டு மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நட்டு வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படையின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்