தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டி

தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.

Update: 2023-08-31 20:16 GMT

துப்பாக்கி சுடும் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் மையத்தில் 14-வது தென் மண்டல துப்பாக்கி சுடும் போட்டி (ஷாட்கன்) நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடக்கும் இந்த துப்பாக்கி சுடும் போட்டி வருகிற 5-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

முன்னணி வீரர்-வீராங்கனைகள்

இந்த போட்டிகளில் உலக தர வரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரித்விராஜ் தொண்டைமான், ராஜா ராஜகோபால தொண்டைமான், சீத்தாராமாராவ், ரவிகிருஷ்ணா, வேல்சங்கர் உள்பட ஏராளமான முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளான நேற்று ஸ்கீட் மற்றும் டபுள் டிராப் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் டிராப் பிரிவில் 85 பேரும், டபுள் டிராப் பிரிவில் 29 பேரும், ஸ்கீட் பிரிவில் 26 பேரும் பங்கேற்கின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாள் போட்டிகள் நடக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்