தூத்துக்குடி விமான நிலையத்தில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் ஆய்வு

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் ஆய்வு செய்தார்

Update: 2022-09-05 12:51 GMT

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார்.

அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் விமான நிலையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்